கொடூரத்தின் உச்சம்…. “பேசலாம் வாம்மா”… தோட்டத்திற்கு திருமணமான மகளை அழைத்துச் சென்று… தந்தை செய்த கொடூரம்…!

By Nanthini on தை 15, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், தனது விருப்பத்திற்கு மாறாகக் காதலுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முனீஷ் தனுக் என்பவரின் 21 வயது மகள் நித்துவிற்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், அவர் தனது கணவரைப் பிரிந்து பழைய காதலனுடன் சென்று குவாலியரில் மறுமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்து, கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குச் சென்று துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், நித்துவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளைக் கௌரவக் கொலை செய்த முனீஷ் தனுக்கை போலீசார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.