“இந்தாங்க சார் இதை பாருங்க”… மருத்துவமனைக்கு அலறியபடியே ஓடிவந்த நபர்… பாக்கெட்டை பார்த்து அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் என்ற ஈ-ரிக்ஷா ஓட்டுநர் விருந்தாவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 1.5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று அவரது விரலில் கடித்தது. இதனால் சற்றும் பதற்றமடையாத தீபக், தன்னை கடித்த அந்த பாம்பைப் பிடித்து தனது ஜாக்கெட் பையிலேயே போட்டுக் கொண்டு, சிகிச்சைக்காக நேராக மதுரா மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றார். தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டினால் மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் இந்த விபரீத செயலைச் செய்துள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்ற தீபக், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் ஆத்திரமடைந்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த உயிருள்ள பாம்பை வெளியே எடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டியதால், மருத்துவமனை வளாகமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தது. சீறிக்கொண்டிருந்த பாம்பைக் கண்டு மருத்துவர்களும் நோயாளிகளும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் அந்த பாம்பைப் பத்திரமாக மீட்டனர். உடனடியாக தீபக்கிற்கு விஷமுறிவு மருந்து அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.