வேலைக்கே போக வேண்டாம்…! குறைந்த முதலீடு செஞ்சா போதும்… மாதம் 9,000 ரூபாய் வரை வருமானம் தரும் போஸ்ட் ஆபீசின் அசத்தலான திட்டம்…!!

By Devi Ramu on தை 13, 2026

Spread the love

வங்கிகளில் வழங்கப்படும் வட்டியை விட லாபகரமான சேமிப்பை விரும்புபவர்களுக்காக, தபால் நிலையத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மத்திய அரசின் நேரடிப் பொறுப்பில் இருப்பதால் இந்த முதலீட்டிற்கு முழுமையான பாதுகாப்பு உண்டு. இத்திட்டத்தின் கீழ் தனிநபர் கணக்கில் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதேபோல் கூட்டுக் கணக்காகத் தொடங்கினால் 15 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஐந்து ஆண்டுகளை முதிர்வு காலமாகக் கொண்ட இத்திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் 9 லட்சம் ரூபாயைத் தனிநபர் கணக்கில் முதலீடு செய்தால், மாதந்தோறும் சுமார் 5,550 ரூபாயை வட்டி வருமானமாக மட்டுமே பெற முடியும். இதுவே கூட்டுக் கணக்கில் அதிகபட்ச தொகையைச் செலுத்தினால், மாதம் 9,250 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இத்திட்டத்தைத் தொடங்க விரும்புவோர் அருகில் உள்ள அஞ்சலகத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களுடன் குறைந்தபட்சம் 1,000 ரூபாயைச் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். இடையில் பணத்தை எடுக்க நேர்ந்தால் சிறிய அபராதத் தொகை கழிக்கப்படும் என்பதால், நீண்ட கால முதலீட்டிற்கு இது சிறந்த தேர்வாகும்.