கையில் பழைய 1 ரூபாய் நாணயம் இருக்கா?”: உடனே போய் ஐபோன் 13-ஐ தூக்கிட்டு வாங்க… இணையத்தைக் கலக்கும் கடைக்காரரின் வைரல் வீடியோ…!!

By Soundarya on தை 12, 2026

Spread the love
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மொபைல் கடைக்காரர் அறிவித்துள்ள வினோதமான சலுகை இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மீரட் ரோஹ்தா சாலை பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள ‘தி மொபைல் கேலரி’ (The Mobile Gallery) என்ற கடையின் உரிமையாளர், பழைய நாணயங்களைக் கொடுத்துவிட்டு புதிய ஐபோனைப் பெற்றுச் செல்லலாம் என அறிவித்துள்ளார்.  , அதில் உங்களிடம் 1982-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1 ரூபாய் நாணயம் இருந்தால், அதற்குப் பதிலாகப் புதிய ஐபோன் 13-ஐப் பெற்றுக்கொள்ளலாம் . உங்களிடம் 1970-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1 ரூபாய் நாணயம் இருந்தால், அதற்குப் பதிலாக இந்தப் போனைப் பெற்றுக்கொள்ளலாம் போன்ற நிபந்தனைகள் வழங்கப்பட்டது.

 

View this post on Instagram

 

   

A post shared by THE MOBILE GALLERY (TMG) (@themobilegallery_mrt)

இந்த வீடியோ, இதுவரை 4.2 கோடிக்கும் (42 Million) அதிகமான பார்வைகளையும், 7.6 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்