தமிழகத்தில் 2026 தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சு, தொகுதி பங்கீடு என தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களுடைய கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகின்றன. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக மற்றும் கூட்டணியை இதுவரை வெளியிடாமல் உள்ளது. திமுக பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமாரும் பிரேமலதாவும் சந்தித்து பேசியதால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல நேற்று நடந்த பிரச்சாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் பிரேமலதா விஜயுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல் வெளியானது.
ஆனால் இதுவரை பிரேமலதா கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். சமீபத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் பிரேமலதா அறிவிக்கவில்லை. இதனிடையே பிரேமலதா யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் ராஜ்யசபா சீட்டுடன் 30 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணியென EPS-யிடம் பிரேமலதா கறாராக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா MP-க்களை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், தேமுதிகவின் கோரிக்கை குறித்து அதிமுக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
