BREAKING: தமிழகத்தில் மீண்டும் அரசு பேருந்து விபத்து…. 20 பயணிகளின் நிலை…. சற்றுமுன் அதிர்ச்சி…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரங்கேறிய கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் வந்த அரசு பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.   இந்த விபத்தின் வீரியத்தால் பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அவற்றில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதே பகுதியில் கடந்த 6 மாதங்களில் 10 விபத்துகள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.