காலையிலேயே விஜய்க்கு ஷாக்… கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் விலகிய முக்கிய புள்ளி… செங்கோட்டையன் அதிர்ச்சி…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் கடந்த சில நாட்களாகவே பலரும் இணைந்து வரும் நிலையில் தற்போது விஜய்க்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு மாற்றுக் கட்சியினர் பலரும் தொடர்ந்து இணைந்து வந்தனர்.

இப்படியான நிலையில் 5 நாட்களுக்கு முன்பு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த அதியமான் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திரும்பியுள்ளார். சென்னையில் திருமாவளவன் முன்னிலையில் தன்னை மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைத்துக் கொண்டார். கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அதியமான் மண்டல செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் அதியமான் விலகியதால் செங்கோட்டையன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.