ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் ஒரு சிறந்த ‘சூப்பர் ஃபுட்’ ஆகும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. மேலும், இது மூளை செல்களுக்குப் புத்துயிர் அளித்து நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் ஒருங்கே அதிகரிக்கிறது. அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் இதய நோய் மற்றும் வாதம் தொடர்பான பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் வலுவடைவதோடு, இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைப்பதோடு, சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வால்நட்ஸ் பெரிதும் உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த சரிவிகித உணவாகக் கருதப்படுகிறது.
