தேமுதிக மாநாட்டில் எதிர்பாராமல் நிகழ்ந்த மரணம்… செம ஷாக்கில் பிரேமலதா…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெற்ற ‘உரிமை மீட்பு மாநாட்டில்’ எதிர்பாராத சோகம் நிகழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் தாவாடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக கிளைச் செயலாளர் செல்வராஜ் (35) என்பவர், மாநாட்டில் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்வராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக நடத்தும் முதல் மாநில மாநாடு இது என்பதால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர். இத்தகைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வின் போது, இளம் வயது நிர்வாகி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் இந்த இழப்பு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.