காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்… கொளத்தூரில் விஜய்யின் அதிரடி என்ட்ரி… திமுகவை வீழ்த்த தவெக கையில் எடுத்த அஸ்திரம்…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போதே தீவிரமான களப்பணிகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ள கொளத்தூர் அல்லது அவர் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் முக்கியத் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காகத் தனிப்படை அமைத்து அந்தந்தத் தொகுதிகளில் நிலவும் மக்களின் குறைகள் மற்றும் ஆளுங்கட்சியின் மீதான அதிருப்திகளைச் சேகரிக்க ரகசிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முதல்வர் தொகுதியில் தவெக வலுவான வேட்பாளரை நிறுத்துவதன் மூலம், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து தனது அரசியல் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பூத் கமிட்டி அமைப்பது முதல் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்ப்பது வரை களப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

   

திமுகவின் ஆதரவாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். திமுகவுக்காக பல பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசிய அவரை தற்போது தவெகவுக்காக பேச இறக்கிவிட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். அதிலும் குறிப்பாக முதல் தொகுதியாக முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூரில் அவர் பேச நாஞ்சில் சம்பத்தே விருப்பம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

   

இந்த ஸ்பீச்சில் திமுகவை அவர் கடுமையாக விமர்சிக்கலாம் என்கின்றனர். திமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படும் தொகுதிகளில் தவெகவின் இந்தத் தீவிரத் தலையீடு, வரும் தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.