தமிழக அரசியலில் புதிய திருப்பம்… திடீரென அந்தர் பல்டி அடித்த ராமதாஸ்… திமுகவுக்கு ஆதரவு… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனிடையே அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸ் முடிவு என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே சமயம் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை நன்றாகத்தான் இருக்கிறது, ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலா புரத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கேட்பதில் விருப்பம் இருந்த போதும் கலைஞரின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தேன் என்றார். மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளது ராமதாஸ் திமுக கூட்டணி பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.