“அடுத்த துணை முதல்வர் செல்வப்பெருந்தகை”.. காங்கிரஸ் பரபரப்பு போஸ்டர்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது. கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நிலையில் திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு ராகுல் காந்தியை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்து சில தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதாக தெரிகிறது.

   

இந்நிலையில் INDIA கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குறள் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில் “2026 இன் துணை முதல்வரே” என்று செல்வ பெருந்தகை போட்டோவுடன் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி உள்ளனர். ஏற்கனவே ஜனநாயகன் விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பில் விஜய்க்கு பலத்த ஆதரவு உள்ளதால், கூட்டணியில் பங்கு தர காத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமையுமோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.