அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான சுப்புரத்தினம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் திமுக எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் மற்றும் சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் 1991 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைவது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. முன்னதாக நவம்பர் 19, 2025 அன்று எஸ்.எஸ்.கதிரவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
