“DNA டெஸ்ட்டுக்கு வர தயக்கமா… ஏன் பயந்து ஓடுறீங்க…?” மாதம்பட்டி ரங்கராஜை கிழித்தெறிந்த ஜாய் கிரிசில்டா…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சுமத்தியுள்ள புகார்கள் சினிமா வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையின் தந்தை ரங்கராஜ் தான் என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ சோதனைக்கு அவர் ஏன் முன்வரவில்லை என்று ஜாய் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் சவால் விட்டுவிட்டு, தற்போது அதற்கான வாய்ப்பு வரும்போது ரங்கராஜ் காலம் கடத்துவது உண்மையை மறைக்கும் முயற்சி என்றும், தவறு செய்தவர்கள் மட்டுமே இப்படி அஞ்சுவார்கள் என்றும் அவர் தனது வீடியோவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

   

தற்போது நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஜாய் கிரிசில்டா, தனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என உறுதிபடக் கூறியுள்ளார். ஏற்கனவே ரங்கராஜ் தாக்கல் செய்த தடை மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் ஜாய்க்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

   

குழந்தையின் எதிர்காலத்திற்காகவும், உண்மையை உலகிற்கு நிரூபிக்கவும் எத்தகைய போராட்டத்தையும் சந்திக்கத் தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குக் கொண்டு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.