மிருகக்காட்சி சாலையில் பயங்கரம்..! கூண்டைத் தாண்டிப் பாய்ந்து வந்து பார்வையாளரை தாக்கிய சிறுத்தை… பீதியில் அலறியடித்து ஓடும் மக்கள்… திக் திக் வீடியோ வைரல்…!!

By Soundarya on தை 8, 2026

Spread the love
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், மிருகக்காட்சிசாலையில் சிறுத்தை ஒன்று கூண்டிற்குள் இருப்பதை மக்கள் கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பது காட்டப்படுகிறது. மக்கள் அச்சமின்றி புகைப்படம் எடுத்தும், வீடியோக்கள் எடுத்தும் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிறுத்தை, கூட்டத்தின் கூச்சல் மற்றும் கேமராக்களின் பிளாஷ் ஒளியால் ஆக்ரோஷமடைந்தது. திடீரென சிறுத்தை கூண்டின் வலை மீது பாய்ந்து, ஆக்ரோஷமாக கர்ஜித்தது. எதிர்பாராத விதமாக, அந்தச் சிறுத்தை ஒரு மனிதனைத் தாக்கியதில் அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, உயிரியல் பூங்காக்களின் பாதுகாப்பு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. பல பயனர்கள் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் இயல்பாக இல்லை என்றும், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் AI தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக எதையும் உருவாக்க முடியும் என்பதால், இத்தகைய வீடியோக்களை மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.