பொதுவாகவே ஒருவர் காதலிக்க தொடங்கி விட்டால் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரையும் கவரவேண்டும் என்ற எண்ணத்தில் சில செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படி நினைத்த ஒருவர் தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோத செய்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றியது வெளிச்சத்திற்கு வந்தது. கேரள மாநிலம் பட்டினம் திட்டம் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ரஞ்சித் ராஜன் என்ற 24 வயது வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இது குறித்து அந்தப் பெண்ணிடம் அவர் தெரிவித்த நிலையில் அந்தப் பெண் பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து அதன் மூலமாக இளம் பெண்ணை காதலிக்க வைத்து விடலாம் என்று நினைத்துள்ளார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தை கவர வேண்டும் என்பதற்காக விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்றினார். அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோத செய்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதை அவருடைய திட்டமாக இருந்தது.
இது பற்றி தனது நண்பர் அஜாஸ் (19) என்பவரிடம் அவர் தெரிவித்த நிலையில் அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பிறகு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணை அவருடைய நண்பர் தனது காரில் பின் தொடர்ந்து சென்றார். அப்போது அந்தப் பெண்ணின் இரு சக்கர வாகனத்தின் மீது காரால் மோதினார். பிறகு சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார்.
கார் மோதிய விபத்தில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டதால் கை உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரியம் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்திற்கு வந்து காயமடைந்த பெண்ணை மீட்டு தனது காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது ரஞ்சித் ராஜன் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோத செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
