பொதுவாகவே வாழ்க்கை சில நேரங்களில் திரைப்படங்களை விட ஆச்சரியமான திருப்பங்களை கொண்டது என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ரஷ்மி என்ற பெண் ஒருவரை வாலிப பருவத்தில் இருந்த காலத்தில் காதலித்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணிடம் தனது காதலை சொல்ல ஜெயப்பிரகாஷ் பயந்த நிலையில் ரஷ்மிக்கு அவருடைய பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் ரஷ்மி வெளிநாடு சென்றுள்ளார். காலப்போக்கில் ஜெயப்பிரகாஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். வெகுவாக காலச்சக்கரம் சுரண்டை நிலையில் ரஷ்மியின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பும் ஜெயப்பிரகாஷியின் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பும் உயிரிழந்துவிட்டன.
இப்படியான சூழலில் தற்செயலாக மீண்டும் சந்தித்த இருவரும் தங்களுடைய பழைய காதலை பகிர்ந்து கொண்டனர். தனிமையில் இருந்த இருவரும் மீதம் இருக்கும் வாழ்க்கையை இணைந்து வாழ முடிவு செய்து 60 வயதில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் சிறப்பம்சமாக இருவருடைய பிள்ளைகளும் நேரில் வந்து தங்கள் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து அனைவரையும் நெகிழ வைத்தனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
