“தவெகவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு”… தமிழகத்தை புரட்டிப் போடும் 2026 தேர்தல்… சற்றுமுன் பரபரப்பு பதிவு…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற சுயமரியாதை முழக்கம் தான் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்கும் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விவாதிப்போம். தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளுகின்ற கட்சியும் சரி தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை.

அந்தக் கட்சி தலைமையிலும் மக்கள் செல்வாக்கு இல்லாத அவர்களே தலைவர்களாக இருக்கின்றார்கள். கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை வசப்படுத்தியே அதிகார பாதையில் அவர்கள் இதுவரை பயணித்துள்ளனர். இப்படி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக கபிலிகரம் செய்யும் தந்திர அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது. இனி இங்கே அதிகார பகிர்ந்து இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது.

   

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று அனைத்து கட்சி தொண்டர்களின் குரலாகவும் மக்களின் குரலாகவும் மாறி உள்ளது. இந்தக் குரலை பிரதிபலிக்கின்ற சுயமரியாதை தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். ஒதுக்கப்பட்ட பிறகு தங்கிய சமூகங்களின் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திலும் வரும் காலம் கனிந்து உள்ளது. இதுவே 2026 சட்டமன்ற தேர்தல் களத்தின் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

   

ஏற்கனவே தமிழகத்தில் தற்போது பெரும்பாலான கட்சிகள் கூடுதல் தொகுதி மற்றும் ஆட்சியில் பங்கு என குரல் எழுப்பி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ஆட்சியில் பங்கு என கூறி வருவதால் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.