பிக்பாஸ் சீசன் 9 வெற்றியாளர் முத்துகுமரன், இணையத்தில் நடக்கும் பண மோசடிகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவன் பலரை ஏமாற்றிவிட்டு, அதைத் தவறு என்று உணராமல் மற்றவர்களும் இதையேதான் செய்கிறார்கள் என நியாயப்படுத்திப் பேசிய வீடியோ முத்துகுமரனை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. “ஏமாற்றுவதைப் பெருமையாகப் பேசும் இந்தச் சிறுவனுக்குத் தமிழ்நாடு காவல்துறை தகுந்த அறிவுரை வழங்கி எச்சரிக்க வேண்டும்” என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெட்டிங் மற்றும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்தும் பலரைப் போலத் தானும் செய்ததாக அந்தச் சிறுவன் வாதிடுவது தவறான முன்னுதாரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூகப் பொறுப்புடன் செயல்படும் முத்துகுமரன், வளர்ந்து வரும் இளைய தலைமுறை இது போன்ற தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
