திடீர் ட்விஸ்ட்… திமுக கூட்டணிக்கு செல்லும் தேமுதிக?… பிரேமலதா போட்ட கண்டிஷன்… ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் களத்தில் புதிய கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக தேமுதிக கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக தற்போது திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது ரகசியமாக தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. தேமுதிக சார்பில் இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாம்.

கட்சியின் செல்வாக்கை நிருபிப்பதற்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும் அதிக இடங்களை பெறுவதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் ஏற்கனவே பல தோழமை கட்சிகள் இருப்பதால் தொகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால் அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.