BREAKING: வந்தது மீண்டும் புயல் அலர்ட்.. தமிழகத்தில் கனமழை வெளுக்கும்…!!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஜனவரி 9-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜனவரி 10-ம் தேதி மழையின் தாக்கம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.