தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக, ஆண்ட கட்சியான அதிமுக, புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது இருக்கும் சூழலில் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது என்பது கடினம். இதனால் அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகள் மிக தீவிரமாக கூட்டணி கணக்குகளை வகுத்து வருகின்றன.
அதன்படி அதிமுக தேசிய கட்சியான பாஜகவும் கூட்டணி அமைத்த நிலையில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன. மேலும் பாமக மற்றும் தேமுதிகவின் கூட்டணி நிலைமை இதுவரை உறுதியாக நிலையில் யார் உடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் தான் கூட்டணி அறிவிப்போம் என்று பிரேமலதா உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் தேமுதிகவை அதிமுக பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பிரேமலதா அறிவித்த நிலையில் மேலும் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாவட்ட செயலாளர்களின் கையில் ஒரு பேப்பர் தரப்பட்டுள்ளது.
அதில் முக்கிய கட்சிகளின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்ஷன் முறையில் தரப்பட்டுள்ளதால் யாருடன் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பமோ அவர்கள் அந்த கட்சியை அந்த பேப்பரில் தேர்வு செய்யலாம். அந்த பேப்பர் ஒரு பெட்டியில் போடப்படும். அதன் பிறகு இதில் எந்த கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கின்றதோ அந்த கட்சியுடன் தேமுதிக உறுதி செய்யப்படும் என நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையின் படி பிரேமலதாவின் முடிவு இருக்கும் என தெரிகிறது.
