சிக்கலில் ஸ்டாலின்..! திமுக அரசின் ஊழல் பட்டியல்… ஆளுநரிடம் ஆதாரங்களை கொடுத்த EPS…!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  இன்று (ஜனவரி 6) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, திமுக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான பட்டியலை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் இபிஎஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக அரசு நிர்வாகத் திறனற்ற அரசாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, வெளிப்படைத்தன்மை இன்றிப் பல கோடி ரூபாய் ஊழல் செய்து, தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.