“ரத்த கலரில் வீட்டு சுவரில் என்ன..?” எழுத தெரியாத பாட்டிக்கு உதவிய பேத்தி…! பரிதாபமாக போன உயிர்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, தனியார் நிதி நிறுவனத்தின் கடுமையான நெருக்கடியால் பஞ்சம்மாள் என்ற மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மகன் ரஞ்சித் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்வதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பஞ்சம்மாள், தனக்கு நேர்ந்த துயரத்தை எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால், தனது பேத்தியின் உதவியுடன் குங்கும நீரைக் கொண்டு வீட்டுச் சுவரில் மரண வாக்குமூலமாக எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பஞ்சம்மாள் உயிரிழந்த நிலையில், அவர் விஷம் குடித்த அவரது பேத்தி தருணிகா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   

நிதி நிறுவன ஊழியர்களின் அத்துமீறிய மிரட்டலே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்குத் தூண்டியதாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.