TVK கூட்டணியில் அமமுக… ஒரே போடாய் போட்ட டிடிவி தினகரன்…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக எந்த கூட்டணியிலும் இதுவரை கைகோர்க்காக அரசியல் கட்சிகள் குறித்து பல கேள்விகள் எழுந்து வருகின்றன. அதேசமயம் தங்களுடைய நிலைப்பாடு குறித்து மறைமுக சிக்னல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி டிடிவி தினகரனின் அமமுக NDA கூட்டணியில் இணையுமா, தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கைகோர்க்குமா அல்லது திமுக கூட்டணியுடன் இணையுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. தினகரன் கடந்த சில மாதங்களாக விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பேசி வருகின்றார். விஜய் பேசிய ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றார்.

மேலும் இபிஎஸ்சை முதலமைச்சராக பரிந்துரை செய்யும் கூட்டணியில் நிச்சயம் இடம்பெற மாட்டோம் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இணைய இருப்பதை இன்று நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் டிடிவி தினகரன் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். தொண்டர்களின் மன ஓட்டத்தை அறிந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கும் கூட்டணிக்கு தான் செல்ல இருக்கின்றோம். தமிழ்நாட்டில் அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அமமுக அங்கம் வகிக்கும் என தெரிவித்தார். ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறிவரும் நிலையில் அதற்கு ஏற்றது போல டிடிவி தினகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.