“ப்ளீஸ் அப்பா என்ன விட்ரு”… பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 14 வயது சிறுமிக்கு ஓராண்டாக நடந்த கொடூரம்…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 14 வயதான சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனால் சிறுமியின் தாயும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்து சிறுமியிடம் விசாரித்த போது கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சிறுமிக்கு அவருடைய தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கர்ப்பமான சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு டி என் ஏ பரிசோதனை செய்ததில் பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியது உறுதியானது.

   

இது தொடர்பாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய தந்தைக்கு தூக்கு தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.