மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் திடீரென என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி – ஷாக் ஆன பிக்பாஸ் போட்டியாளர்கள்!

By Elango on தை 5, 2026

Spread the love

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 துவங்கிய போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடிகர் மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வீட்டில் உள்ள பகுதிகளை எல்லாம் சுற்றி காட்டி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது 90 நாட்கள் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் விஜய் சேதுபதி திடீரென என்ட்ரி கொடுத்தது அங்கிருந்த போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. பிறகு அவர்கள் உற்சாகமாகி அவரை வரவேற்றனர்.

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்களை பெற்று போட்டியாளர் அரோரா வெற்றி பெற்று, பைனலுக்குள் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார். அதற்கான டிக்கெட்டை வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். கார்டன் ஏரியாவில் அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு பின்புறம் கதவை திறந்து திடீரென வந்த அவரை பார்த்து பிக்பாஸ் போட்டியாளர்கள் முதலில் ஷாக் ஆகிவிட்டனர்.

   

அரோராவை மேடைக்கு அழைத்து டிக்கெட் டூ பினோலே டிக்கெட்டை அவரிடம் கொடுத்த விஜய் சேதுபதி பிறகு வீட்டுக்குள் வந்து கிச்சன் பகுதியில் இருந்த அடுப்பு மேடையில் அமர்ந்தபடி விக்கல்ஸ் விக்ரம் அரோரா சாண்ட்ரா கானா வினோத் சபரி மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு தந்த சாக்லேட்டை சுவைத்து சாப்பிட்ட பிறகு போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு விஜய் சேதுபதி அங்கிருந்து வெளியே வந்து பிறகு வந்த கதவு வழியாகவே வெளியேறி சென்றார்.