இந்தியாவில் காச நோய் ஒரு பெரும் சுகாதார சவாலாக இருந்து வருகின்றது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி உலகில் 27 சதவீதம் காச நோயாளிகள் இந்தியாவில் இருக்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் விதமாக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு நிக்ஷய் போஷன் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காச நோயாளிக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது நோயாளிகளின் சிகிச்சை காலம் முழுவதும் வழங்கப்படும். சமீபத்தில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
காச நோயாளிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் இரண்டு பேர் காச நோயால் உயிரிழக்கின்றனர். தற்போது இந்த திட்ட மூலம் இறப்பு விகிதம் குறைந்து வருகின்றது. இந்த தொகை ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். சில மாநிலங்களில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து உணவு கூடை வழங்கப்படும்.
தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நோயாளிகளை ஏற்று குறைந்தது ஆறு மாதம் ஆதரவு வழங்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். வயது வரம்பு எதுவும் கிடையாது. காச நோய் உள்ள அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்படும். உங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு சுகாதார மையம் சென்று, காச நோய் படிவம் பெற்று, விவரங்கள் நிரப்பி, ஆவணங்கள் இணைக்கவும். ஆன்லைனில் https://nikshay.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
