அடுத்த பரபரப்பு… திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு… மீண்டும் ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய K.S.அழகிரி…!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

திமுகவை பொருத்தவரையில் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது. திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என காங்கிரஸ் குரல் எழுப்பி வருகிறது.

   

இந்நிலையில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பதோ, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதோ தவறு கிடையாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மதசார்பின்மைக்காக காங்கிரசுக்கு திமுகவை விட சிறந்த தோழன் வேறு யாரும் இல்லை என்ற அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஒருபோதும் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மதசார்பின்மை என்ற ஒற்றை நோக்கமே அனைவரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்கிறது என்றும் பேசி உள்ளார்.