போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்…!! முதல் காலாண்டு வட்டி விகிதம் என்ன? மத்திய அரசின் சூப்பர் அப்டேட்…!!

By Devi Ramu on தை 4, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) அஞ்சலகச் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து ஏழாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் அதே நிலையில் நீடிக்கச் செய்துள்ளது. இதன் மூலம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டியும், சாதாரண அஞ்சலகச் சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டியும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற நீண்டகால முதலீட்டுத் திட்டங்களிலும் பழைய வட்டியே நீடிப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற முதியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பயனுள்ள புத்தாண்டு செய்தியாக அமைந்துள்ளது.