தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தமிழக அரசு மக்கள் மட்டும் அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் பென்ஷன் கிடைக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துவரும் நிலையில் புதிதாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
