ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் சொன்ன அந்த விஷயம்… பல ஆண்டுகளுக்கு பின் சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபல நடிகர்!

By Elango on தை 3, 2026

Spread the love

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் அனுமோகன் நடிகர் விஜய் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அனுமோகன் கூறியதாவது, ஒரு படத்தில் விஜயும் நானும் நடித்தோம். அப்போது எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது விட்டுவிட்டேன். அப்போது நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக நின்று சிகரெட் பிடித்தேன். விஜய் என்னிடம் ஏதோ சொல்வதற்காக வந்தார். என் கையில் சிகரெட் இருப்பதை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

என்ன தம்பி என்னாச்சு என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை அண்ணா. நீங்கள் சிகரெட் பிடிக்கிறீர்கள் என்றார். பரவாயில்லை சொல்லுங்கள் என்று சொன்னேன். எனக்கு இந்த சிகரெட் வாடையே பிடிக்காது. அது உடல்நலத்திற்கு ரொம்பவும் கேடு. நீங்களும் இதைவிட்டு விடுங்கள் என்று சொன்னார். அவர் எனக்கு வயது குறைவானவராக இருந்தாலும் என் உடல்நலம் மீது அக்கறை எடுத்து அதை சொன்னார். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று நடிகர் அனுமோகன் அதில் கூறியிருக்கிறார்.