இவனெல்லாம் ஒரு மனுஷனா? பிக்பாஸ் வீட்டுக்குள் கம்ருதீனின் அடாவடியான செயலைப் பார்த்து கொதித்துப் போன பார்வையாளர்கள்!

By Elango on தை 3, 2026

Spread the love

பிக்பாஸ் வீட்டுக்குள் பார்வதி என்ற ஒரு போட்டியாளரால் அந்த வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பார்வதியின் கைப்பாவையாக மாறிவிட்ட கம்ருதீன், பார்வதியின் பேச்சை கேட்டுக்கொண்டு நேற்று கார் டாஸ்க்கில் வரம்பு மீறி அடாவடியாக நடந்துக்கொண்ட விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கம்ருதீனை தூண்டிவிட்ட பார்வதிக்கும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

நேற்றைய கார் டாஸ்க்கில் காருக்குள் இருந்த சாண்ட்ராவை மிகவும் தரக்குறைவாக பேசி வம்பிழுத்த பார்வதி கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காருக்குள் இருந்து வெளியே தள்ளி உதைத்து வெளியேற்றினார். அவர்களது கொடூர செயலால் சாண்ட்ரா விழுந்த நிலையில் வலிப்பு வந்து துடித்துக்கொண்டு இருந்தார்.

   

அப்போது பார்வதி, அதுதான் மெடிக்கல் டீம் இருக்காங்களே, அப்புறம் என்ன? என்று எகத்தாளமாக பேச அவங்க சும்மா நடிப்பாங்க என்று இரக்கமே இல்லாமல் கம்ருதீன் கூறினார். இதை பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர். இவனெல்லாம் ஒரு மனுஷனா என்று கோபமாக திட்டி விமர்சித்து வருகின்றனர். 2 பேரையும் ரெட்கார்டு கொடுத்து உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.