“நீ சோத்த திங்கிறியா..?” சுசீந்திரம் தேரோட்டத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் சேகர்பாபு…. அப்படி என்னாச்சு…?

By Devi Ramu on தை 2, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் தேரோட்டத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பங்கேற்று அமைச்சர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தபோது, அங்கிருந்த சிலர் “பாரத் மாதா கி ஜே” என்று முழக்கமிட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், அவர்களைக் கண்டித்தும் கோஷம் நிறுத்தப்படாததால், “நீ சோற்றைத் திண்கிறாயா இல்லையா” என்று ஒருமையில் கோபமாகக் கத்தியது பக்தர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

   

கோவில் போன்ற புனித இடங்களில் வன்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என பக்தர்கள் விரும்பும் நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், குமரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கோவில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு விழாக்கள் குறித்துப் பட்டியலிட்டார்.

   

மேலும், தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தைப் புனரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத் திருவிழாவிற்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.