தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. குறிப்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில் கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களிடம் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸில் வெளிப்படையாகவே சண்டை வெடித்துள்ளது. அரசின் கடன் பற்றி காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியதை அடுத்து தமிழக காங்கிரசில் பணிப்போர் நிலவுகிறது. இந்நிலையில் ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஜோதிமணி mp வைத்துள்ளார். எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சி பிரச்சனைகள் மனசோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
