நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏசி வசதி, பயோ டாய்லெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ள நிலையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் முதலில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.
வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி அல்லது 19 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்க வைக்க உள்ளதாகவும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கட்டணத்தை பொறுத்தவரையில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு 2300 ஆகவும் முதல் வகுப்புக்கு 3600 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
