அதிமுகவில் திடீர் திருப்பம்..! நேரில் சந்திக்கிறார் இபிஎஸ்… செம குஷியில் ஓபிஎஸ்…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love
உள்நாட்டுத் துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 5-ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்த பிறகு இந்தச் சந்திப்பு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு, தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது
இந்த ஆலோசனையின் போது, அதிமுக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் (OPS) மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதற்குச் சம்மதிக்கும் பட்சத்தில், மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வாய்ப்புள்ளதால் ஓபிஎஸ் தரப்பினர் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.