தமிழகத்தில் அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப்படுவதாக கறிக்கோழி பண்ணை வளர்ப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் அறிவித்துள்ளார். வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை கறி கோழிகளை வளர்க்க மாட்டோம். கோழிக்குஞ்சுகளை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் கோழி உற்பத்தி தடைப்படுவதுடன் தட்டுப்பாடு காரணமாக கோழிகளின் விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபரிமலை சீசன் முடிவடையவுள்ள நிலையில் இனிமேல்தான் கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில், கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகளின் போராட்டத்தால், பண்ணைகளில் கோழி உற்பத்தி தடைபடுவதுடன், வரத்து குறைவால் பற்றாக்குறை ஏற்பட்டு கறிக்கோழிகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
