பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளங்களையும் கடந்து ஒரு நல்ல நடிகராக தன்னை தமிழ் சினிமாவில் நிலைநாட்ட நடிகர் விக்ரம் பிரபு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
அவர் நடித்த இறுகப்பற்று டாணாக்காரன் லவ் மேரேஜ் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் கடந்த வாரம் அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான சிறை என்ற படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார். இந்த படத்தில் அக்சய் குமார் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் நடிகை அனிஷ்மா அனில் குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த படத்திலும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் விக்ரம் பிரபு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரமான நிலையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியுள்ளது. ஒரு சின்ன பட்ஜெட் படம் இவ்வளவு பெரிய வெற்றியை வரவேற்பை வசூலை ஒரே வாரத்தில் பெற்றிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
