தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் டைரக்சனில் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். தொடர்ந்து குஷி லண்டன் சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் ஆனால் பெரும்பாலும் அவர் கவர்ச்சியான உடையணிந்து கிளாமர் வேடங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக மும்தாஜ் சினிமாவில் நடிப்பதில்லை. முழுமையான இஸ்லாமிய பெண்ணாக மாறி ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை மும்தாஜ் கூறியிருப்பதாவது, 16 வயதில் சினிமாவுக்குள் நான் வந்தேன். பல படங்களில் நடித்தேன். இஸ்லாமிய பெண்ணான நான் திரைப்படங்களில் நடிப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.
இப்போது ஒரு சாதாரண இஸ்லாமிய பெண்ணாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். என்னை நேசிக்கிற மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். தயவு செய்து என்னுடைய பழைய புகைப்படங்கள், வீடியோக்களை யாரும் ஷேர் பண்ணாதீங்க. என் மன மாற்றத்திற்கு மதிப்பு கொடுங்க. என் வயசுக்கு என் உடைக்கு என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க என்று அதில் மாஜி நடிகை மும்தாஜ் கூறியிருக்கிறார்.
