அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…? 6-ம் தேதி கூடுகிறது அமைச்சரவை.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியாகப்போகும் மாஸ் அறிவிப்பு…!!

By Devi Ramu on தை 1, 2026

Spread the love

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து நீண்ட காலமாக நிலவி வரும் எதிர்பார்ப்புகளுக்கு, வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விடை கிடைக்க வாய்ப்புள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையில், ஓய்வூதியத் திட்டம் குறித்து அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், இந்த கூட்டத்தில் மெகா அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

   

பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, பல்வேறு புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் வாரத்தில் வெளியாகப்போகும் அறிவிப்புகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான பணியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.