சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா..? இனி கவலையே வேண்டாம்… மீண்டும் பெற எளிய வழிமுறைகள் இதோ…!!

By Soundarya on தை 1, 2026

Spread the love
உங்கள் வீடு அல்லது நிலத்தின் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால்,  முதலில், பத்திரம் தொலைந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை (FIR) நகலைப் பெற வேண்டும். அதன் தொடர்ச்சியாக, சொத்து விவரங்களைக் குறிப்பிட்டு முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் ‘பத்திரம் காணவில்லை’ என விளம்பரம் செய்வது அவசியமாகும்.
மேற்கூறிய FIR நகல் மற்றும் நாளிதழ் விளம்பர நகல்களுடன், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ (Non-Traceable Certificate) என்ற சான்றிதழைப் பெற வேண்டும். இறுதியில், இந்த ஆவணங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய கட்டணத்தைச் செலுத்தி உங்கள் சொத்து பத்திரத்தின் அதிகாரப்பூர்வ நகலை (Certified Copy) பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு டிஎன்ரெஜிநேட் (TNREGINET) இணையதளத்தைப் பார்வையிடலாம்.