“நான் நெனச்சா, உன்னையும் உன் கடையையும் காலி பண்ணிடுவேன்”… சில்லறை வியாபாரியை மிரட்டிய திமுக பிரமுகர்… பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் பிஹாரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி கணேஷ் என்ற பெயரில் சிறிய அளவில் மளிகை கடை நடத்திவரும் நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் இவருடைய கடையில் பொருட்களை வாங்குவது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் வியாபாரியின் கடைக்கு அப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் பொருட்களை வாங்க வந்துள்ளார். அப்போது ஒரு லிட்டர் அளவுள்ள சமையல் எண்ணெய் பாக்கெட் வாங்கிவிட்டு அதற்கு 500 கொடுத்து மீதி தொகையை கேட்டுள்ளார்.

கடையில் இருந்த ஷியாம் பிஹாரி 500 ரூபாய்க்கு என்னிடம் சில்லறை இல்லை ஜி பே மூலமாக அனுப்புகிறேன் இல்லையென்றால் நீங்கள் என்னை பாக்கெட்டுக்கான பணத்தை ஜிபே மூலமாக அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் எண்ணெய் பாக்கெட்டை வியாபாரி மீது தூக்கி வீசி அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மாறி மாறி பேசிக்கொண்டிருந்த போது ஆறுமுகம் குரல் கேட்டு வந்த அவருடைய ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் சிலர் வியாபாரியை தரகுறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினர்.

   

மேலும் கை கால்களை உடைத்து விடுவேன் என்று அவருடைய மகனையும் மிரட்டினர். இதனை அருகில் இருந்து பார்த்த கணேஷ் என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். ஆறுமுகம் ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக துணைச் செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் ஷியாம் பிஹாரியிடம், நான் நெனச்சா உன்னையும் உன் கடையையும் காலி பண்ணி விடுவேன் என்று தனது பதவியை கூறி மிரட்டியுள்ளார். எனவே இது குறித்து வியாபாரி தனக்கும் தன்னுடைய மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆறுமுகம் இது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். மளிகை கடையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது m