ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். ஆனால் ரேஷன் கார்டில் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். குடும்ப வருமானம் என்பது அவசியமாகும்.
நிறைய பேர் குடும்ப வருமானத்தை குறைவாக கூறி ரேஷன் கார்டுகளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிவிட்டு ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல நிறைய பேர் போலியான ஆவணங்களை வைத்து இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்துள்ளன. கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் ரேஷன் கார்டுகளை பலரும் பயன்படுத்துகின்றன.
அப்படிப்பட்ட நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த ரேஷன் கார்டுகளை அரசு தற்போது ரத்து செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பயனாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும். அதை செய்யாதவர்கள் மீதும் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் 2025 டிசம்பர் 31ஆம் தேதி இன்றுக்குள் கே வை சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்.
அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இன்றுக்குள் தங்களுடைய இ கேஒய்சி சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இதனை சரியான காலக்கெடுவுக்குள் முடிக்காவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமாக அல்லது ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கேஒய்சி சரிபார்ப்பை முடித்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
