மாகாபா ஆனந்திற்கு வந்த சோதனை…! டீசலில் தண்ணீர் கலந்ததால் சொகுசு கார் அவுட்…. பல லட்ச ரூபாய் நஷ்டம்…!!

By Devi Ramu on மார்கழி 30, 2025

Spread the love

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், தனது விலை உயர்ந்த சொகுசு காருக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற இடத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கில் அவர் டீசல் போட்டபோது, அதில் அதிகளவு தண்ணீர் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது.

எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதை உறுதி செய்த மாகாபா, இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆதார் வீடியோவை வெளியிட்டு மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். கலப்பட எரிபொருளால் காரின் இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனைச் சரிசெய்யப் பல லட்ச ரூபாய் செலவாகும் எனத் தெரிகிறது.

   

இது குறித்து எரிபொருள் நிலையத்திடம் புகார் அளித்தபோது, அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் பேரம் பேச முயன்றதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பழுதுபார்ப்புச் செலவுக்கான ரசீதுகளையும் அவர் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், வாகன ஓட்டிகளிடையே கலப்பட டீசல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

 

View this post on Instagram

 

A post shared by MA KA PA Anand (@makapa_anand)