சமீபகாலமாக கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், புதிய பயனாளர்கள் சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். முதலில், உங்கள் செலவு செய்யும் முறை மற்றும் தேவைகளுக்கு (உதாரணமாகப் பயணம் அல்லது ஷாப்பிங்) ஏற்ற சரியான கார்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
கார்டு வழங்கும் சலுகைகள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைக் கண்காணித்து, அவை காலாவதியாகும் முன் தள்ளுபடி வவுச்சர்களாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வரம்பை முழுமையாகப் பயன்படுத்தாமல் கட்டுக்குள் வைப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.
கிரெடிட் கார்டு பில்களைக் கடைசி தேதிக்கு முன்பே முழுமையாகச் செலுத்துவது மிக முக்கியம்; ‘குறைந்தபட்சத் தொகை’ மட்டும் செலுத்தினால் மீதமுள்ள தொகைக்கு அதிக வட்டி வசூலிக்கப்படும். பொருட்களைத் தவணை முறையில் வாங்கும்போது அதற்கான வட்டி விகிதம் மற்றும் கூடுதல் கட்டணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
தேவையற்ற கடனில் சிக்காமல் இருக்க EMI வசதியைத் தவிர்ப்பது நல்லது. முறையான திட்டமிடலுடன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், அது ஒரு சுமையாக அமையாமல் உங்கள் நிதி மேலாண்மைக்குச் சிறந்த கருவியாக விளங்கும்.
