திமுக கூட்டணியில் விரிசல்… இனி எதிரிகளே வேண்டாம்… உண்மையை போட்டுடைத்த பாஜக முக்கிய புள்ளி…!!

By Soundarya on மார்கழி 30, 2025

Spread the love

பாஜக இனி திமுகவை நேரடியாகத் தாக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அந்தப் பணியைப் பகிரங்கமாகத் தயக்கமின்றி காங்கிரஸே செய்து வருவதாகவும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஆர்.என். ஜெயபிரகாஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் திமுக அரசின் கடன் சுமை மற்றும் நிர்வாகம் குறித்து எழுப்பும் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய அவர், எதிரிகளை விடக் கூட்டணிக் கட்சிகளே உண்மைகளை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவின் வீழ்ச்சியை அதன் கூட்டணிக் கட்சிகளே பார்த்துக் கொள்ளும் எனக் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதும், தமிழக அரசின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களைக் காங்கிரஸ் நிர்வாகிகள் மறுப்பதும் திமுக-காங்கிரஸ் உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயபிரகாஷ் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.