கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியாகுறிச்சி பகுதியில்,நேற்று அதிமுகவின் பிரம்மாண்டமான கட்சி இணைப்பு விழா நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடலூர் மேற்கு மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் மருத்துவர் பிரியதர்ஷன் முன்னிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த விழாவில், திமுக, பாமக மற்றும் பிற மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்களை முறைப்படி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு சி.வி. சண்முகம் மற்றும் அருண்மொழித்தேவன் ஆகியோர் அதிமுகவின் கட்சித் துண்டுகளை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். 2
