பராசக்தி படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலக காரணம் இதுதான் – ஓபனாக பேசிய இயக்குனர் சுதா கொங்கரா!

By Elango on மார்கழி 29, 2025

Spread the love

புறநானூறு என்ற டைட்டிலில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த படம் தான், பிறகு சூர்யா அந்த படத்தில் நடிக்காமல் வெளியேறியதால் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற பெயரில் இப்போது உருவாகி உள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, கொரோனா காலகட்டத்தில் தான் சூர்யாவுக்கு நான் இந்த கதையை சொன்னேன். எனக்கு சூர்யாவை மட்டும் தான் அந்த நேரத்தில் தெரியும். அதனால் சூர்யாவிடம் போன் செய்து கதையை பற்றி சொன்னேன்.

அவரும் சரி என்றதால் நான் அந்த கதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இந்த படத்துக்காக தொடர்ந்து சூட்டிங் செய்ய தனக்கு நேரமில்லை என சூர்யா கூறினார். தொடர்ந்து சூட்டிங் செய்யாமல் இடைவெளி விட்டு விட்டு செய்தால் தயாரிப்பு செலவு மிகவும் அதிகமாகி விடும். தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். இதுதான் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக முக்கிய காரணம் என்று சுதா கொங்கரா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்