பெண்களே குட் நியூஸ்..! திருமண உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 28, 2025

Spread the love
திருப்போரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மக்களுக்காகவே தொடங்கப்பட்ட இயக்கம் என்றும், அக்கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். கடந்த கால சாதனைகளை நினைவுகூர்ந்த அவர், திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் புத்துயிர் பெறும் எனத் தெரிவித்தார்.
எதிர்கால வாக்குறுதிகளாக, அடுத்தமுறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 50,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும், 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மீண்டும் விலையில்லா மடிக்கணினிகள் (Laptop) வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.